மக்களாட்சி - நம் பங்கும் கடமைகளும்…

Politics [நன்றி - PTI]

ஒரு சிறந்த ஆளும் கட்சியின் நற்பண்புகளாக இவை அமைதல் வேண்டும்:

‣ வெளிப்படைத்தன்மை மற்றும் மக்களுக்குப் பதில் சொல்லும் கடமை.
‣ எளிய மக்களுக்கான ஆக்கபூர்வமான செயல் திட்டங்கள் உள்ளிட்ட மக்கள் நலக் கொள்கைகள்.
‣ மக்களின் கோரிக்கைகளைச் செவிமடுத்துப் பரிசீலனை செய்வது.
‣ விமர்சனங்களைப் பகுப்பாய்வு செய்தல்: ஆக்கப்பூர்வமான விமர்சனங்களை அரசு தன் வளர்ச்சிக்கான ஆலோசனையாகக் கருத வேண்டும்.
‣ ஆரோக்கியமான பத்திரிகையாளர் சந்திப்புகள்: வாராந்திர சந்திப்புகள் மற்றும் மாதாந்திர விரிவான சந்திப்புகள் மூலம் மக்களுடன் தொடர்பில் இருப்பது.

ஸ்பைடர்மேன் திரைப்படத்தில் ஒரு வசனம் வரும்:

  
    “நமது சக்தி அதிகரிக்கும் போது, நமது கடமைகளும் அதிகமாகின்றன”
    (With great power comes great responsibility).
  


  
    "பணியுமாம் என்றும் பெருமை; சிறுமை
     அணியுமாம் தன்னை வியந்து."
    
- திருக்குறள் 978


எதிர்க்கட்சி:

மக்களாட்சியில் எதிர்க்கட்சியின் பங்கு மிகவும் முக்கியமானது. அரசின் நிறை-குறைகளைச் சுட்டிக்காட்டி, சட்டசபையில் மக்களின் குரலாகத் தன் கருத்தை ஒலிக்கச் செய்வது இவர்களின் கடமையாகும்.

  
    "அறனறிந்து மூத்த அறிவுடையார் கேண்மை
     திறனறிந்து தேர்ந்து கொளல்."
    
- திருக்குறள் 441


மக்கள்:

“ஓட்டுப் போட்டவுடன் நம் கடமை முடிந்துவிட்டது” என்று எண்ணுவது தவறு. மக்களாட்சி என்பது ஒரு நிகழ்வு (Event) அல்ல; அது ஒரு தொடர்ச்சியான செயல்முறை (Process).

‣ ⁠அரசின் செயல்பாடுகளைத் தொடர்ந்து கண்காணிப்பது.
‣ நல்லது செய்தால் பாராட்டுவதும், தவறு நேர்ந்தால் விமர்சிப்பதும் அவசியம்.
‣ சமூக நலன் சார்ந்த கோரிக்கைகளை அரசிடம் உரிமையோடு கேட்பது (ஏனெனில் இது நமது அரசாங்கம்!).

விமர்சன நாகரிகம்:

ஒரு சமுதாயத்தில் பல்வேறு கருத்துக்கள் இருப்பதுதான் ஜனநாயகம் (Democratic). மாறாக, ஒரே கருத்துதான் இருக்க வேண்டும் என்று நினைப்பது சர்வாதிகாரம் (Dictatorship). ஒரு சமூகம் எந்த அளவிற்கு நாகரிகம் அடைந்திருக்கிறது என்பதை, அச்சமூகம் முன்வைக்கும் விமர்சனங்களை வைத்தே கூறிவிடலாம்.

‣ ⁠விமர்சனம் என்பது கருத்தியல் சார்ந்து ஆக்கப்பூர்வமாக இருத்தல் நலம்.
‣ ⁠தனிநபர் தாக்குதல் மற்றும் இழிசொற்களைத் தவிர்ப்பது நாகரிகமானது.

  
    "இன்சொல் இனிதீன்றல் காண்பான் எவன்கொலோ
    வன்சொல் வழங்கு வது."
    
- திருக்குறள் 99


நன்றி வணக்கம்…