Jack...

Jack

நாங்க பள்ளிகூடத்துல படிச்சிட்டு இருந்த காலகட்டம், அப்ப தான் அது எங்க வீட்டுக்கு வந்துச்சி... குட்டியா, வெள்ளையா, ஒரு கண்ண சுத்தி சின்ன கறுப்பு வலையம். அப்ப விஜய் டீவில Titanic போட்ட நேரம், அதுக்கு Jack-னு பேர் வச்சுட்டோம்...

விடிய காலையில தூங்கிட்டு இருக்குற எங்கள எழுப்பி விளையாடு கூப்டும்... கடுப்பா எந்திருச்சி, கொஞ்சம் நேரத்துல ஜாலியா விளையாட ஆரம்பிச்சிருவேம்... அதுக்கு நாங்க training-லாம் குடுத்து இருக்கோம், அதுலாம் சிரிப்பா இருக்கும்...

அது வெளியாட்கள கண்டா பயப்புடும். வீட்டுக்கு, தொரிஞ்சவங்க வந்தாங்கனா, கொலைக்கலாம் செய்யாது அப்டியே எங்கனா மறைவா போய் ஒழிஞ்சிக்கும்... ஆனா குழந்தைகள பாத்தா பயப்புடாது... அப்புறம் அதுக்கு பட்டாசுனா ரொம்ப பயம், தீபாவளி அப்பலாம் வீட்டுக்குள்ளேயே தான் இருக்கும்...

அவருக்கு நிறைய நண்பர்கள்லாம் இருக்காங்க... அதுல ஒரு பூன, இரண்டு பேரும் ஒன்னா தான் இருப்பாங்க. ஆனா நாங்க யாருனா பாக்கும்போது அப்டியே அத தொரத்துர மாதிரி சும்மா சீன்னு...

அதுக்கு இப்ப நல்லா வயசாயிடிச்சி, கொஞ்சம் ஒடம்பும் சரியில்ல... அப்புறம் எங்க ஏரியால இருக்குற சிலர், அத போட்டு நல்லா அடிச்சு இருக்காங்க... சிலர் வந்து என்கிட்ட சொல்லி இருக்காங்க, தம்பி நான் தான்ப்பா அதுக்கு தண்ணி வச்சேன், சோறு வச்சேன்னு... அனா கல்ல தூக்கி அடிச்சத மட்டும் சொல்ல மாட்டாங்க... எங்க வீட்டு பக்கத்துல ஒருத்தர், நல்லா வசதியானவர், அவர் என்ன பண்ணுவார்னா அங்க பக்கத்துல இருக்குற சின்ன சின்ன குப்பையலாம் அவரே எடுப்பாரு அப்டியே பாக்கும் போது பொக்கும்... ஆனா நாயலாம் ஒரு இரக்கமே இல்லாம போட்டு அடிப்பாரு...

ஆனா ஒப்பீட்டளவில அது மேல அன்பா இருந்தவங்கதான் அதிகம்...

Jack எல்லா வலிகளையும் தாங்கிக் கொண்டுதான் வாழ்கிறது... போன வாரம் ஒரு வண்டி அது மேல ஏறிடிச்சி... அதால நடக்க முடியில... Blue Cross-ல, ஊசி போட்டாங்க, மாத்திர எழுதி கொடுத்தாங்க ஒரு மாசம் வச்சி பாருங்க சரியாக வாய்பு இருக்குன்னு சொன்னாங்க...

அதனுடைய வாழ்க்கை மேலும் வலி நிறைந்த தாய் மாறிவிட்டது... ஒரு இருண்டு நாள் கொஞ்சம் நல்லா இருந்துச்சி... அப்புறம் இன்னும் மோசமா ஆயிடிச்சு, நேத்து இரவு Jack-னு கூப்புடும் போது அதால தலய தூக்க முடியில கண்ண மட்டும் தொறந்து மேல தூக்கி பாத்திச்சு...

அன்பு மட்டுமே செலத்த தெரிந்த ஒரு உயிர் இன்று இல்லை...

கடந்த கால நினைவுகளுடன் எதிர் காலத்தை நோக்கி பயணிக்கும் காலவோட்டத்தில் கரைந்து போகும் சிறு துகள் ஒன்று உன் நினைவுகளுடன்...

சென்று வா Jack...