பாசமலர்

Pasamalar

எல்லாருக்கும் தெரியும் அண்ணன், தங்கச்சி பாசம் தான் படம். ஆனால் இந்தப் படம் இன்னொரு விசயத்துக்கும் முக்கியத்துவம் கொடுத்து இருக்கு, அது கம்யூனிசம். தமிழ்நாடு ஒரு விசித்திரமான மாநிலம் தான் ஏனா 1960-களிலேயே கம்யூனிசத்த அழுத்தம், திருத்தமா ஒரு படம் பேசிட்டு போதுனா அது சாதாரண விசயம் இல்ல. சுதந்திரத்திற்கு முன்னாடியே கம்யூனிஸ்டுகளுக்கு கடுமையான நெருக்கடி... பெரியார் கம்யூனிசம் பேச கூடாதுன்னு அரசு அச்சுறுத்தல்...

அப்புறம் இந்த படத்துல வர இரண்டு பாட்டையும் தமிழ்நாட்டையும் பிரிக்கவே முடியாதுன்னு சொல்ற அளவுக்கு அது தமிழ்நாட்டோட ஒன்னா கலந்துடிச்சி. இன்னிக்கும் பெரும்பாலான கல்யாணங்கள்ல பெண் அழைப்புக்கு இந்த பாட்டு இல்லாம இருக்காது...

இன்னொரு பாட்டு...
அண்ணன், தங்கச்சி முதல் முறையா பிரிஞ்சிடுறாங்க. அப்படியே சில காலங்கள் கடந்து போது... இரண்டு பேராலயும் அந்த பிரிவ தாங்க முடியாத ஒரு மனநிலை... படத்தோட உச்ச கட்ட காட்சில, தமிழ் சினிமாவின் தலை சிறந்த பாடல்களில் ஒன்றான அந்த பாடல் அப்ப தான் திரையில வருது. ஏற்கனவே படத்தோட ஒன்றிப் போயிருக்க பார்வையாளர்கள் மனசுல இந்தப் பாட்டு ஒரு கலவையான உணர்வ ஏற்படுத்திடும்...

அந்தப் பாட்டு இப்படி முடியும்...

"கண்ணில் மணி போல,
மணியின் நிழல் போல,
கலந்து பிறந்தோமடா...
இந்த மண்ணும் கடல் வானும்,
மறைந்து முடிந்தாலும்,
மறக்க முடியாதடா...
உறவைப் பிரிக்க முடியாதடா..."

இந்த முடிவுலையும் ஒரு மறை பொருள் வச்சி இருப்பாரு கவிஞர் கண்ணதாசன்