
Public Transport / Restaurants:
பஸ்ல ஏறி phone பேச ஆரம்பிச்சா இறங்குற வரைக்கும் நாம பேசிட்டே இருக்கோம், அது நம்ம பக்கத்துல இருக்கிறவங்களுக்கு தொல்லையா இருக்குமா அப்படின்றத பத்தி கொஞ்சம் கூட சிந்திக்கிறது இல்ல, Restaurant-லயும் இதே கதை தான்…
அது எந்த அளவுக்கு அந்த இடத்தில இருக்கிற அமைதியை கெடுக்குதுன்னு கொஞ்சமாச்சும் ஒரு Civic Sense இருந்தா நல்லா இருக்கும்னு நினைக்கிறேன்…
வீடு:
வீடு என்பத நாம பொதுவா பாதுகாப்பான இடம்னு சொல்லுவோம், ஆனா அது அமைதியான இடமா இருக்கா? சரி எப்பவும் அமைதியா வேண்டாம், “அமைதியா இருக்க அது என்ன லைப்ரேரியா?” அப்படின்னு கேக்குறீங்க அதானே?. ஒரு வீட்டுல ஒரு நபர் படிக்கவோ எழுதவோ வேலை செய்யவோ கொஞ்சம் அமைதியான சூழல் வேணும்னு எதிர்பார்த்தா அந்த வீட்டில் உள்ள மற்றவர்கள் அதை மதிச்சி ஒரு அமைதியான சூழலை ஏற்படுத்தலாம் அப்படி இல்லன்னா ஏற்கனவே அமைதியாக இருக்கிற சூழ்நிலைய குறைந்தபட்சம் கெடுக்காமல் இருந்தாலே போதும்.
பேரறிஞர் அண்ணா சொல்லுவாரு
“வீட்டிற்குத் தேவையான அடிப்படை வசதிகளுக்கு அடுத்தபடியாக, ஒவ்வொரு வீட்டிலும் ஒரு படிக்கும் அறை (நூலகம்) கட்டாயம் இருக்க வேண்டும்”.
இன்றைய காலகட்டத்தில் படிப்பதற்கான அறை இருக்கு, அல்லது ஒரு அறைய படிக்க பயன்படுத்திக்கலாம், ஆனா அந்த அறை அமைதியா இருக்கா அப்படின்றது தான் கேள்வி? ஒன்னு நாள் பூரா டிவி ஓடிக்கிட்டு இருக்கு, இல்லனா மொபைல்ல எதாவது ஓடிட்டு இருக்கு, அப்படி இல்லன்னா மொபைல்ல பேசிட்டு இருக்கோம்…
இப்ப ஒரு வீட்ல ஒரு ரூம்ல ரெண்டு பேர் இருக்காங்க ஒருத்தருக்கு போன் வருது அவர் உடனே போனை எடுத்து பேசிட்டு வச்சிட்டா சரி அப்படி இல்லாம ஒருத்தர் இப்ப ஒரு மணி நேரம் பேச போறாருன்னு வைங்க அவர் அந்த போன எடுத்துகிட்டே வெளில போய் பேசினால் நல்லது அப்படி இல்லாம பக்கத்துல ஒருத்தர் இருக்கிறத மதிக்காம ஒரு மணி நேரமா பேசிக்கிட்டு இருந்தா அது பக்கத்துல இருக்குறவரை எந்த அளவுக்கு பாதிக்கும்னு கொஞ்சமாச்சும் நினைச்சி பாக்கணும். இப்படி பேசுறவங்க பக்கத்துல இருக்குறவங்கள மனுசனாவே மதிக்கல அப்படின்னு நான் சொல்லல ஆனா பக்கத்துல இருக்குறவங்கள மனுசனா மதிச்சா நல்லா இருக்கும்னு சொல்றேன்.
Video Content:
இன்னொன்னு இருக்கு பொது இடங்களில் சத்தமா வீடியோ பார்க்கிறது including theatre, அது ஒரு பெருங்கதை… அதுக்கு தனியா ஒரு போஸ்டே போடலாம்
முடிவுரை:
See, ஒரு சொசைட்டியா நமக்கு ஒரு பொது கருத்து இருக்கு லைப்ரரினா எல்லாரும் அமைதியா இருக்கணும் அப்படின்னு தெரியும், அத அப்படியே கொஞ்சம் extend பண்ணி public transport, Hotel, வீடு அப்படின்னு எல்லாத்துளையும் ஓரளவுக்கு அமைதிக்கு முக்கியத்துவம் கொடுத்தா நல்லா இருக்கும்…
“நல்லது செய்தல் ஆற்றீராயினும், அல்லது
செய்தல் ஓம்புமின்; அதுதான்,
எல்லாரும் உவப்பது; அன்றியும், நல்லாற்று
உய்த்தும் அளிப்பக் கோடல்.”
- நாலடியார் 218
தமிழகத்தை ஒரு அமைதி பூங்காவாக மாற்றுவோம் 😁
நன்றி வணக்கம்…